குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: அலிகர், சஹரான்பூரில் இணையதள சேவை முடக்கம்

By ஆர்.ஷபிமுன்னா

குடியுரிமை மசோதாவை எதிர்த்து உபியில் போராட்டம் வலுக்கிறது. இதன் அலிகர், சஹரான்பூர் மாவட்டத்தில் இணையதள சேவை 17 மணி நேரம் முடக்கப்பட்டது.

உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் இன்று பல்கலைகழக வளாகத்தில் உள்ள ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் கண்டன ஊர்வலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பழம்பெரும் மத்திய பல்கலைகழகத்தின் மாணவர் பேரவை சார்பிலான ஊர்வலத்தில் சுமார் முப்பதாயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊர்வலத்தில் அலிகர் ஆட்சியரின் பங்களா வரை சென்று மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதனால், அசாம்பாவதம் எதுவும் நேராமல் இருக்க வேண்டி, நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று மாலை 5.00 வரை இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. நகரின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக அலிகரில் இன்று பதட்டம் நிலவியது. எனினும், அலிகர் போராசிரியர்கள் அளித்த ஆலோசனை காரணமாக ஊர்வலம் வளாகத்தின் உள்ளேயே நடத்தி முடிக்கப்பட்டது. இதன் இறுதியில், அலிகர் நகர உதவி ஆட்சியர் ராகேஷ் மல்பானி பல்கலைகழக முக்கிய வாயிலில் வந்து பெற்றுக்கொண்டார்.

மத்திய அரசால் அமலாக்கப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற கண்ட ஊர்வலத்தில், பல்கலைகழகத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டக்காரர்கள் முன்பாக ஸ்வராஜ் அபியான் கட்சியின் தலைவர் யோகேந்தர் யாதவ் வந்து கண்டன உரையாற்றினார். இதில் அவர், குடியுரிமை மத்திய அரசை கண்டித்தார்.

உ.பி.யின் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு இல்லாமல் பலியான குழந்தைகள் விபத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைதான மருத்துவர் கபீல்கானும் இங்கு வந்திருந்தார். அவர் தனது கண்டன உரையில், பாஜக ஆளும் உபி மாநில அரசையும் கண்டித்தார்.

சஹரான்பூரில் பதட்டம்

உ.பி.யின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சஹரான்பூரிலும் இன்று முஸ்லிம் மதரஸாக்களின் மாணவர்கள் கண்டன ஊர்வலம் அறிவித்திருந்தனர். இதற்கு அனுமதி அளிக்காத மாவட்ட நிர்வாகம் மத்திய பாதுகாப்பு படைகளின் பலத்த பாதுகாப்பு அமர்த்தியிருந்தது.

இதனால், சஹரான்பூரில் அசாம்பாவிதம் நேராமல் இருக்கும் பொருட்டு இணையதள சேவை முடக்கப்பட்டிருந்தது. இது, உ.பி.யில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

14 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்