தூக்கிலிடும் பணி செய்யும் இரண்டு ஹேங்மேன்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு திஹார் சிறை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளும் விரைவில் தூக்கிலிடப்படக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, 23-வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அவரின் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டு பலன் அளிக்காமல் 2012-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த மருத்துவ மாணவியின் பெயர் வெளியிடப்படவில்லை, அவரை நிர்பயா என்றே அழைத்தனர். டெல்லி போலீஸார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரைக் கைது செய்தனர்.
இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். ‘நிர்பயா’ வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
ஆனால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. இதில் 3 குற்றவாளிகள் திஹார் சிறையிலும், ஒருவர் மண்டோலி சிறையில் 14-ம் எண் அறையிலும் அடைக்கப்பட்டு இருந்தார்.
குற்றவாளி பவன் குமார் குப்தா, மண்டோலி சிறையில் இருந்து திஹார் சிறை எண் 2க்கு மாற்றப்பட்டார்.
இதனால் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் தூக்கிலிடும் பணி செய்யும் ஹேங்மேன்’ பணியில் திஹார் சிறையில் யாரும் இல்லாததால் இரண்டு பேரை உடனடியாக அனுப்பி வைக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு திஹார் சிறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து உ.பி. சிறைத்துறை கூடுதல் இயக்குநர் ஆனந்த் குமார் கூறுகையில் ‘‘ஹேங்மேன்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு திஹார் சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இரண்டுபேரில ஒருவர் மீரட்டிலும், மற்றொருவர் லக்னோவிலும் தற்போது பணியில் உள்ளார். அவர்களை அனுப்பி வைக்க தயாராக இருக்கிறோம்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago