உன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு

By செய்திப்பிரிவு

உன்னாவ் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பினை நீதிபதி வருகிற 16-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் எழந்தது. இதுதொடர்பாக அவரை போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணும், உறவினர்கள் சிலரும், வழக்கறிஞருடன் ரேபரேலி சிறையில் உள்ள தங்கள் உறவினரை சந்திக்கச் சென்றனர். அப்போது லாரி ஒன்று காரின் மீது விபத்துக்குள்ளானது. அதில் காரில் பயணம் செய்த இரு பெண்கள் பலியானார்கள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் படுகாயத்துடன் உயிர்பிழைத்தனர்.

இதையடுத்து, உன்னாவ் பலாத்கார வழக்கு, விபத்து நடந்த வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றியது உத்தரபிரதேச அரசு. இதைத்தொடர்ந்து எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, கொலைமுயற்சி, பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிஐ.

உத்தரப்பிரதேசத்தில் வழக்கை விசாரிக்காமல் வெளிமாநிலத்தில் விசாரிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. நேற்று தனது வாதங்களை முடித்து கொண்டது. கடந்த டிசம்பர் 2ந்தேதி கேமிரா முன்னிலையில் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தீர்ப்பினை நீதிபதி வருகிற 16-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்