குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நேற்று நள்ளிரவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாளை(புதன்கிழமை) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணிக்குப் பெரும்பான்மை இருப்பதால், ஏறக்குறைய 9 மணிநேர விவாதத்துக்குப்பின் மசோதா நிறைவேறியது.
ஆனால், மாநிலங்களவையில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதால், இன்று அனல் பறக்கும் விவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மசோதா நாட்டு நலனுக்கானது, எந்த மதத்தினரும் கவலைப்படத் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். ஆனால், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கடுமையாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். ஒவைசி எம்.பி. மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மசோதாவை கிழித்து எறிந்தார்.
இருப்பினும் நீண்ட விவாதத்துக்குப்பின் மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது.
இந்நிலையில் மாநிலங்களவையில் நாளை உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.
இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 105 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது. இதில் பாஜகவுக்கு 81 எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதா தளம் 6, சிரோன்மணி அகாலிதளம் 3 உறுப்பினர்கள், இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு எம்.பி. நியமன எம்.பி.க்கள் 11 பேர் என 105 பேர் ஆதரவு இருக்கிறது. இன்னும் 15 எம்.பி.க்கள் ஆதரவு பாஜகவுக்கு தேவை.
இந்த 15எம்.பி.க்கள் ஆதரவைப் பெறுவதற்காக அதிமுக(11 எம்.பி.க்கள்), பிஜு ஜனதா தளம்(7 எம்.பிக்கள்) டிஆர்எஸ்(6 எம்.பி.க்கள்), ஒய்எஸ்ஆர் சிபி(2 எம்.பி.க்கள்) ஆகிய கட்சிகளுடன் பாஜக பேசி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று பாஜக தரப்பு நம்புகிறது. மேலும், சிவசேனா கட்சியும் ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளது.
ஒருவேளை குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு இந்த கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான அளவைக் காட்டிலும் எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் என்பதால், எளிதாகக் குடியுரிமைத் திருத்த மசோதாவை பாஜக நிறைவேற்றும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago