கர்நாடக தேர்தல் முடிவு; பாஜகவை நாடு எந்த அளவிற்கு நம்புகிறது என்பதை காட்டுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

இந்த நாடு எந்த அளவிற்கு பாஜகவை நம்புகிறது என்பதையே கர்நாடக இடைத்தேர்தல் முடிவகள் காட்டுகின்றன என பிரதமர் மோடி கூறினார்.

கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக ஓரிடத்தில் வென்றுள்ளது. மேலும் 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதாதளம் எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. ஒரு தொகுதியில் சுயேச்சை முன்னிலை வகித்து வருகிறார்.ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஹசாரிபாக்கில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
‘‘கர்நாடக மக்கள் இன்று காங்கிரஸையும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தை நிராகரித்துள்ளனர். இருகட்சிகளும் அமைத்த நிலையற்ற ஆட்சியை மக்கள் மறக்கவில்லை. அதனால் இன்று அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.

நிலையான ஆட்சியை வழங்கும் பாஜகவே அவர்கள் விரும்புகின்றனர். அரசியலில் நிலையான தன்மையையே அவர்கள் விரும்புகின்றனர்.

நாட்டு மக்கள் பாஜகவை எந்த அளவிற்கு நம்புகிறார்கள் என்பதற்கு கர்நாடக இடைத் தேர்தல் முடிவுகளே சாட்சி. கர்நாடக மக்களுக்கு எனது நன்றி’’ எனக் பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்