தமிழகத்தின் குலசேகரப்பட்டினத் தில் ராக்கெட் ஏவுதளம் அமைப் பதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் தற்போது இரண்டு ராக்கெட் ஏவு தளங்கள் உள்ளன. இந்த ஏவுதளங் களில் இருந்துதான் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வரு கின்றன.
இந்நிலையில் மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு தகுந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டினத்தை தேர்வு செய்தது.
இதுகுறித்து மாநிலங்களவை யில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக மத்திய அணு சக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அண்மையில் பதில் அளித்தார். அதில் ‘'தமிழகத் தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு முன்வந்துள்ளது. அதற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுகிறது’’ என்று அறிவித்தார்.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை இஸ்ரோ தொடங்கி யுள்ளது. நேராக தெற்கு நோக்கி ராக்கெட்டை ஏவ வேண்டும் என்றால், ஏவுதளம் தமிழத்தின் மையப்பகுதி கடற்பகுதியில் இருந்தால்தான் சாத்தியப்படும். அப்படி பார்த்தால் குலசேகரப்பட்டினம் சரியாக இருக்கும். தற்போது ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து நேராக தெற்கு நோக்கி ராக் கெட்டை ஏவ முடியவில்லை.
குலசேகரப்பட்டினத்தில் ஏவு தளம் அமைக்க மற்றொரு முக்கிய காரணம் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்து விசை அமைப்பு மையமாகும். இது பிஎஸ்எல்வியின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலை இன்ஜின்களை ஒருங்கிணைக்கிறது. ஏவுதளம் அமைக்க தூத்துக்குடியில் 2300 ஏக்கர் தேவைப்படுகிறது. இது தற்போதைய ஹரிகோட்டா ஏவுதளத்தை விடவும் சிறியதாகத் தான் இருக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
40 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago