கடல் அரிப்பால் காணாமல் போகும் கிராமங்கள் பிரச்சனையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பியான கனிமொழி பேசினார். இவரது கோரிக்கையை மத்திய அமைச்சர் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் சிறப்புக்குழு அனுப்பி பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.
இது குறித்து மக்களவையில் மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த தனது பதிலில் கூறியதாவது:
‘‘சென்னையில் உள்ள தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆய்வு நிலையம் மிகச்சிறந்தது ஆகும். அந்த ஆய்வு நிலையத்துக்கு ஒருமுறை சென்று பார்க்குமாறு நான் கனிமொழி அவர்களை விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய நாட்டின் 7,500 கி.மீ நீளமுள்ள ஒட்டுமொத்த கடற்பரப்பின் வரைபடம், வான்வழிப் புகைப்படங்கள் அந்த நிலையத்தில் உள்ளன. தமிழ்நாடு மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் கடற்கரை சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
லட்சத் தீவில் பவளப்பாறைத் தோட்டம் அமைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் 600 ஹெக்டேரில் மாங்குரோவ் காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கடலோரத் தாவரங்கள் வளர்க்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் கடல் உட்புகுதலால் கிராமங்கள் அழிகின்றன என்று அரசுக்கு எந்தத் தகவலும் வரவில்லை’’ எனத் தெரிவித்தார். இதற்கு துணக்கேள்வி எழுப்பிய மக்களவையின் திமுக துணைத்தலைவரான கனிமொழி கூறும்போது, ‘‘எனது தொகுதியான தூத்துக்குடியிலேயே கடலோர கிராமங்கள் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன’’ எனத் தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் ஜாவ்டேகர் அளித்த பதிலில் கூறும்போது, ‘‘அதுபற்றி எனக்கு உடனே தகவல் கொடுங்கள். நான் உடனடியாக ஒரு சிறப்புக் குழுவை அனுப்புகிறேன்.’’ எனப் பதிலளித்தார்.
கடந்த நவம்பர் 19 ஆம் தேதி மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய கனிமொழி, இந்தியா தனது கடற்கரைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை கடல் அரிப்பின் காரணமாக இழந்திருப்பதாக சுட்டிக் காட்டி இருந்தார். இதில், தமிழ்நாட்டில் சுமார் 41 சதவிகிதம் கடற்கரைப் பகுதிகள் கடல் அரிப்பின் காரணமாக கடலுக்குள் போய்விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago