ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் கடந்த வாரம் சரணடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகளில் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணும், அவரது கணவரும் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கும் புகைப்படத்தில் அந்தப் பெண்ணை அவரது தாயார் அடையாளம் காட்டி யுள்ளார்.
கேரள மாநிலம் காஸர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிந்து. இவரது மகளான நிமிஷா, அங் குள்ள ஒரு கல்லூரியில் இளங் கலை பல் அறுவை சிகிச்சை (பிடிஎஸ்) படிப்பில் இறுதியாண்டு பயின்று வந்தார்.
இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு நிமிஷா திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல்துறையினரிடமும் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். எனி னும், அவர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில், சில மாதங் களுக்கு பின்னர், தாயார் பிந்துவை தொடர்புகொண்ட நிமிஷா, பெக் ஸென் என்ற இஸ்லாமிய இளை ஞரை திருமணம் செய்து கொண்ட தாகவும், தமது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, பாத்திமாவும், அவரது கணவர் பெக்ஸெனும் ஆப்கானிஸ்தான் சென்றுவிட்டதாக பிந்துவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகு, வெகுநாட்களாகியும் அவரிட மிருந்து அவரது தாய்க்கு அழைப்பு வரவில்லை.
இந்த சூழலில், ஆப்கானிஸ் தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டு ராணுவத்திடம் கடந்த வாரம் சரணடைந்தனர். அவர்களில் 10 பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியானது.
இதையடுத்து, சரணடைந்த தீவி ரவாதிகளின் புகைப்படங்களை ஆப்கானிஸ்தானிடம் இருந்து பெற்ற தேசியப் புலனாய்வுக் குழு (என்ஐஏ) அதிகாரிகள், இதுதொடர் பாக விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, அப்புகைப்படத்தில் உள்ள தமது மகளான நிமிஷா (எ) பாத்திமாவை அவரது தாயார் பிந்து சில நாட்களுக்கு முன்பு அடையாளம் காட்டியுள்ளார். மேலும், தமது மகளுடன் இருக்கும் அவரது கணவர் பெக்ஸெனையும், அவர் களின் கைக்குழந்தையையும் பிந்து அடையாளம் காட்டியிருப்பதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இந்தியா கொண்டுவர நடவடிக்கை
இந்நிலையில், ஆப்கானிஸ் தான் ராணுவத்தின் காவலில் இருக்கும் இந்தியர்களை விரை வில் இந்தியா கொண்டு வந்து விசாரணை நடத்தவும் என்ஐஏ முடிவு செய்துள்ளது.
முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் திடீ ரென மாயமாகினர். இதுதொடர் பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் சிரியா வில் இயங்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக சென் றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago