3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபருக்கு டெல்லியில் வரவேற்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று டெல்லி வந்து சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையில் அண்மையில் நடந்த தேர்தலுக்கு பிறகு அந்நாட்டின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்றார். அவர் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் முதல் வெளிநாட்டுப் பயணமாக கோத்தபய நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார்.

கோத்தபய இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது இந்தியா இலங்கை இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதிக்கவுள்ளனர்.

இலங்கையில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று வது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய நிலவரம், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்தப் பேச்சு வார்த்தையில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் கோத்தபய ராஜ பக்ச சந்தித்து பேசுகிறார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்