பாஜகவுக்கு தாம் ஆதரவளித்தது, கிளர்ச்சியை உருவாக்குவதற்காக அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜகவுட னான கூட்டணி முறிந்ததை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி யமைப்பதாக இருந்தது.
ஆனால், தேசியவாத காங் கிரஸ் கட்சியின் மூத்த தலைவ ரான அஜித் பவார், திடீரென அக்கூட்டணியிலிருந்து விலகி தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் சாய்ந்தார். இதனைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக, மகாராஷ் டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பொறுப்பேற்றனர்.
எனினும், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், முதல் வர் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர் அஜித் பவாரும் தங்கள் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, சிவசேனா - தேசி யவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் சாத்தியமாகியது. இதன் தொடர்ச்சியாக, அக் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராக இன்று பதவியேற்க இருக்கிறார்.
இதற்கிடையே, துணை முதல் வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார், நேற்று முன்தினம் இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், தமது சித்தப்பாவுமான சரத் பவாரை சந்தித்து பேசி னார்.
இந்த நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத் திலும் அஜித் பவார் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு அங்கிருந்த செய்தியாளர்களை அஜித் பவார் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைய வேண்டி அக்கட்சிக்கு நான் ஆதரவளித்தது உண்மைதான். அதற்காக, தேசியவாத காங்கிர ஸில் இருந்து நான் வெளியேறி விட்டதாக அர்த்தம் கிடையாது. நான் என்றைக்கும் தேசியவாத காங்கிரஸில்தான் இருப்பேன். சரத் பவார் மட்டுமே என் தலைவர். இவ்வாறு அவர் கூறினார்.-
பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago