ஐஎஸ் பாணி தாக்குதல் சதி தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு 14 ஆண்டு சிறை: கொச்சி என்ஐஏ நீதிமன்றம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஐஎஸ் பாணியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி கொச்சியில் உள்ள என்ஐஏ காவல் நிலையத் தில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2-ம் தேதி கண்ணூ ரில் ரகசிய கூட்டம் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் இருவர் கைது செய்யப் பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மன்சீத் முகமது உள்ளிட்டோர் மீது சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அபு ஆயிஷா (எ) ஷஜீர் மங்களசேரி தலைமையில் ‘அன்சர் உல்-கலிபா கேரளா’ என்ற பெயரில் ஒரு குழு இயங்கி வந்தது தெரியவந்தது. இக்குழு, தென்னிந் தியாவின் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டங்களை தீட்டியதும் நிரூபண மானது. மேலும் வெளிநாட்டினர் அதிலும் குறிப்பாக கொடைக் கானல் அருகே உள்ள வட்டக்கன லுக்கு வரும் யூதர்கள் மீது தாக்கு தல் நடத்த திட்டமிட்டதும் விசா ரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் மீதான புகார்கள் நிரூ பிக்கப்பட்டதால், மன்சீத் முகமது உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிபதி பி.கிருஷ்ணகுமார் கடந்த 25-ம் தேதி தீர்ப்பளித்தார். அதேநேரம் ஜாசிம் என்பவரை மட்டும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், குற்றவாளி களுக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதன்படி, முக்கிய குற்றவாளியான மன்சீத் முகமதுக்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2-வது குற்றவாளியான ஸ்வாலி முகமதுக்கு 10 ஆண்டுகளும் 3-வது குற்றவாளியான ரஷித் அலிக்கு 7 ஆண்டுகளும், 4 மற்றும் 8-வது குற்றவாளிகளான என்.கே.ராம்ஷாத், மொய்னுதீன் ஆகியோருக்கு 3 ஆண்டுகளும் 5-வது குற்றவாளி சப்வனுக்கு 8 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்