காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிராப்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.
இந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீ்ன் இயக்கத்தைச் சேர்ந்த இர்பான் அகமது ரத்தேர், இர்பான் ஷேக் ஆகிய 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இர்பான் அகமது ராஜ்போரா பகுதியையும் இர்பான் ஷேக் நைரா பகுதியையும் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் உடல்களும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும் மீட்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.
இதனிடையே, நகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் வாயிலில் நேற்று குண்டு ஒன்று வெடித்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வெடித்தது பெட்ரோல் குண்டா அல்லது கையெறி குண்டா என்று ஆராய்ந்து வருவதாகவும் இதற்கு காரணமானவர்களை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago