கர்நாடகாவில் நடந்த அதே கதை: எடியூரப்பா பாணியில் தேவேந்திர பட்னாவிஸ் - அவசரப்பட்டதால் பாஜகவுக்கு நேர்ந்த கதி

By செய்திப்பிரிவு

பெங்களூரு

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் வராக பொறுப்பேற்க இருந்த நிலையில், சரத் பவாரின் உறவினர் அஜித் பவார் திடீரென பாஜக பக்கம் சாய்ந்தார். இதனைத் தொடர்ந்து, அதிகாலையில் பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் அவசரகதி யில் முதல்வராக பொறுப்பேற்றார்.

மகாராஷ்டிரா அரசியலில் அரங்கேறிய இதே காட்சிகள்தான் கர்நாடகாவில் 2006-ம் ஆண்டு அரங்கேறி இருந்தன. காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்த நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி திடீரென மஜதவில் இருந்த 58 எம்எல்ஏக்களில் 46 பேரை பிரித்துக்கொண்டு பாஜக பக்கம் சாய்ந்தார். இதனால், முதல்வர் தரம்சிங் அரசு க‌விழ்ந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் குமாரசாமி முதல்வராகவும், எடியூரப்பா துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைப்பதற்கு, கர்நாடகாவின் இந்த பாணி உதவியது. அதேசமயத்தில், தற் போது அவர் ராஜினாமா செய்வதற் கும் கர்நாடக அரசியலில் நிகழ்ந்த மற்றொரு சம்பவமும் முன்னுதா ரணமாக அமைந்திருக்கிறது.

அதாவது, கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்து முதல்வர் நாற்காலியை பிடிக்க முயற்சித்தன.

ஆனால், எடியூரப்பா திடீரென முதல்வராக பதவியேற்றார். அவருக்கு போதிய எம்எல்ஏக் களின் ஆதரவு இல்லாத நிலையில் காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. ஆளுநர் வஜூபாய் வாலா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 15 நாள் அவகாசம் வழங்கி னார். இதையடுத்து, பாஜக எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் இறங்கியது.

இதனால் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட போது, எடியூரப்பா 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்ட‌து. மே 19-ம் தேதி கர்நாடக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக் கெடுப்பு நடத்துவதற்கு முன்பே, போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத நிலையில் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

மகாராஷ்டிர அரசியல் விவ காரத்தில் உச்ச நீதிமன்றம் நம் பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதும், எடியூரப்பா பாணி யில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்பே தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இரு மாநிலங்களிலும் பாஜக அவசரப்பட்டு ஆட்சியமைத்து, ஒரு சில நாட்களிலே ஆட்சியை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்