கிரிமனல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்கு தடைகோரிய மனு: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By பிடிஐ

கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை, குற்றப்பின்னணி உள்ளவர்களை அரசியல் கட்சிகள் தேர்தலில் தங்கள் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரும் மனுமீது உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், "இந்திய அரசியலில் கிரிமினலாக்குவது அதிகரித்துவருகிறது. ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு அளித்த அறிக்கையின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 24 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

கடந்த 2009-ம் ஆம்டு தேர்தலில் 7,810 வேட்பாளர்களை ஆய்வு செய்ததில் 1,158 பேர் அதாவது 15 சதவீதம் பேர் மீதுதான் கிரிமினல் வழக்கும் 8 சதவீதம் அதாவது 610 பேர் மீதுதான் தீவிரமான கிரிமினல் வழக்கும் இருந்தது. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 8163 வேட்பாளர்களை ஆய்வு செய்ததில் 17 சதவீதம், அதாவது 1398 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 11சதவீதம் அதாவது 889 பேர் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன

ஆதலால், அரசியல் கட்சிகள் கிரிமினல் பின்புலம் உள்ளவர்களை வேட்பாளர்களை நிறுத்தவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே பலமுறை மனுச்செய்தும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இதுபோன்ற வழக்கை அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்தநிலையில் அந்த வழக்கைக் கடந்த ஜனவரி 21ம் தேதி தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணையத்தை அணுகி நிவாரணம் பெறக் கூறியது

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி பி.ஆர். காவே ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரிக்கத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்க மறுத்த நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு மட்டும் பிறப்பித்தது. அந்த உத்தரவில் அடுத்த 3 மாதங்களுக்குள் மனுதாரரின் கோரிக்கை மீது உரியமுடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்