உலக முந்திரி தினம்: தமிழக முந்திரிக்கு தனிமரியாதை; பயணிகளுக்கு சுவைமிக்க ஆச்சரியங்களைத்தந்த அரேபிய விமானங்கள்

By ஐஏஎன்எஸ்

உலக முந்திரி தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் 'எமிரேட்ஸ்' பயணிகள் ஜெட் விமானங்களில் இன்று காலை முதல் பயணிகளுக்கு இந்திய முந்திரியினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுகளை வழங்கி சுவைமிக்க ஆச்சரியங்களைத் தந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வளைகுடாவை தளமாகக் கொண்ட முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் உலக முந்திரி தினமான இன்று வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்திய முந்திரிகளின் மீதுள்ள தங்கள் காதலை எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அது புகழ்ந்து தள்ளியது.

துபாயிலிருந்து இயக்கப்படும் எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ''சர்வதேச மற்றும் பிராந்திய விமானங்களில் எங்கள் விருந்தினர்களுக்கு சுவையான மற்றும் வறுத்த இந்தியா முந்திரிப் பருப்பை ஒரு சிற்றுண்டியாகவும், பல்வேறு முந்திரி உணவுவகைகளாகவும் வழங்கியுள்ளோம்." என்று தெரிவித்துள்ளது.

எமிட்ரேஸ் விமான நிறுவன அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முந்திரியின் பெருமளவு உற்பத்தி நாடான இந்தியா, விமானப் போக்குவரத்துக்கு சரியான ஒரு நாடாகும். ஏனெனில் இந்நாடு 86 நாடுகளில் 160 இடங்களுக்கு அதன் சரக்குகளை ஏற்றிச்செல்லும் விமானப் போக்குவரத்தை உருவாக்கியுள்ளது.

இந்திய முந்திரி உற்பத்தியின் பொருளாதார திறனை நாங்கள் கொண்டாடக் காரணம், இந்தியாவின் ஓர் உற்பத்திப் பொருளை எங்கள் விமான போக்குவரத்தின் ஒரு முக்கிய அங்கமாக வைத்திருக்கிறோம். அதன்முலம் இந்திய முந்திரி விவசாயிகளுக்கு மேலும் வணிக வாய்ப்புகளுக்கான ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் தூண்டமுடியும்.

அதேநேரம் அதன் ஏற்றுமதிகளில் ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) நாடு மட்டுமே 21 சதவீத முந்திரிகளை இறக்குமதி செய்கிறது. அதாவது ஓராண்டில் 80,000 டன் முந்திரிகளை இந்தியாவிலிருந்து நாங்கள் இறக்குமதி செய்கிறோம். இதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் 900 மில்லியன்.

இன்று உலக முந்திரி தினம் என்பதால் இந்திய முந்திரிகளை கொண்டாடும்விதமாக எங்கள் நிறுவனத்தில் இன்று பயணம் செய்யும் எங்கள் விருந்தினர்களுக்கு வறுத்த முந்திரிகளை தனி சிற்றுண்டியாகவும், முந்திரிகளை உள்ளடக்கிய பல்வேறு சுவையான உணவுகளையும் இன்று காலை பரிமாறினோம்.

இன்று முழுவதும் வழங்கப்படும் விமான மெனுவில் மிளகுத்தூள்கலந்து வறுத்த முந்திரிகள், பட்டர் சிக்கன், கானு பாதம் தியா மேச்சர், பொங்கல், ஷாஹி பன்னீர், மொர்கு குருமா மற்றும் பல சுவைமிக்க உணவுகளை கண்ணைக்கவரும் வகையில் அலங்கரிப்பட்டு பரிமாறப்படுகிறது.

முதல் வகுப்பு பயணிகளுக்கு தமிழ்நாட்டு முந்திரி

முதல்வகுப்பு பயணிகளுக்கும் பிஸினெஸ் கிளாஸ் பயணிகளுக்கும் தமிழ்நாட்டின் முந்திரிகளில் தயாரிக்கப்பட்ட வறுத்த இந்திய மசாலா முந்திரி உணவுகள் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும், எமிரேட்ஸ் விமான நிறுவனம் எங்கள் உலகளாவிய விமானப் பயணிகளுக்கென அதன் எண்ணற்ற பிராந்திய மற்றும் சர்வதேச சுவையான உணவுகளில் சுமார் 33 டன் மசாலா முந்திரிகளை 125 டன் பாதாமுடன் பிஸ்தாக்கள் மற்றும் மக்காடமியா சேர்ந்து வழங்கி வருகிறோம்.

இதற்கென எங்கள் எமிரேட்ஸ் நிறுவனம் 13,707 இந்தியர்களை வேலைக்கு வைத்துள்ளது, இவர்கள் எங்கள் பணியாளர்களில் 21 சதவிகிதம் ஆவர். இவர்கள் உலகெங்கிலும் 86 நாடுகளில் 159 இடங்களுக்குப் பறக்கின்றனர்.

இவ்வாறு ஐக்கிய அரபு அமீரக விமான நிறுவனமான எமிட்ரேஸ் தெரிவித்துள்ளது.

விரைவான விமான சேவையை வழங்கும் எமிரேட்ஸின் சரக்குப் பிரிவான எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் கொச்சியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு 50,000 கிலோவுக்கு மேற்பட்ட முந்திரி கொண்டு செல்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்