தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைப்பதற்கான ஆய்வுப் பணி யில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. வெளிநாடுகளை பின் பற்றி நம் நாட்டில் முதல்முறை யாக இந்த ஆய்வை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்ய உள்ளது.
நாடு முழுவதும் தற்போது சுமார் ஒரு லட்சம் கி.மீ தொலை வுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இதில் கடந்த 1989-ம் ஆண்டில் சுமார் 3000 கி.மீ. தொலைவுக்கு மனிதசக்தியை பயன்படுத்தி ஆய்வு நடத்தப் பட்டது. மகராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் அங்குள்ள நெடுஞ் சாலைகளை சீரமைக்கும்போது, ஆய்வுத் தகவல்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு பெரும் உதவியாக இல்லை.
எனவே மீதம் உள்ள 97,000 கி.மீ. நீளத்துக்கு தற்போது அதி நவீன தொழில்நுட்பம் மூலம் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக தனியார் நிறுவனங் களுக்கு டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் இந்த ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பிறகு சாலைகளை மிகவும் சிறப்பாக அமைக்க முயற்சிக் கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து `தி இந்து’விடம் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இது தேசிய நெடுஞ்சாலை சொத்து பராமரிப்பு முறையை உருவாக் கும் முயற்சி ஆகும். இது போன்ற முக்கிய விவரங்கள் இல்லாதது நம்மிடையே பெரிய குறைபாடாக உள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளை பராமரிப் பதிலும், மேம்படுத்துவதிலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 25 சதவீத சாலை களை அகலப்படுத்த உத்தர விட்டுள்ளதால், இந்த ஆய்வு மிகவும் உதவியாக இருக்கும்” என்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் சாலைகளின் ஆய்வுக்காக நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வாகனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதன் மூலம் சாலை யில் உள்ள பள்ளங்கள், சாலை யோரம் உள்ள மரங்கள், குடியிருப்புகள், சாலையின் போக்குவரத்து நிலை, வழியில் உள்ள சிறு பாலங்கள், அவற்றின் தாங்கும் திறன், சாலையை அகலப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கள் உள்ளிட்ட விவரங்களை இந்த வாகனங்கள் துல்லியமாக சேகரித்து விடுகின்றன.
இதைவிட கூடுதல் விவரங் களை சேகரிக்கும் வகையில் பல்வேறு புதிய கணினி மென் பொருள்கள் தற்போது உருவாக் கப்பட்டுள்ளன. இவை தாங்கிய வாகனங்கள் தான் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செய்யவிருக்கும் ஆய்வில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இதில், ஜிபிஎஸ் கருவிகள், கேமராக்கள், தட்பவெட்பம் அறியும் கருவிகள் என அனைத்தும் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் ஆய்வுக்கு பின் சாலைகளை சீரமைப்பதும், மேம்படுத்துவதும் எளிதாக இருப்பதுடன் செலவுகளையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago