காஷ்மீரில் 34 அரசியல் கைதிகள் ஓட்டலில் இருந்து எம்எல்ஏ விடுதிக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகரில் சென்டார் ஓட்டலில் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டிருந்த அரசியல் கைதிகள் 34 பேரையும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் எம்எல்ஏ விடுதிக்கு மாற்றியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங் களாக பிரிக்கப்பட்டது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அரசியல் மற்றும் பிரிவினை வாத தலைவர்கள் பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நகரில் தால் ஏரிக்கரையில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான சென்டார் ஓட்டலில் அரசியல் கைதிகள் 34 பேர் அடைத்து வைக்கப்பட்டனர்.

மக்கள் மாநாடு கட்சியின் சஜ்ஜத் லோனே, தேசிய மாநாடு கட்சியின் அலி முகம்மது சாகர், மக்கள் ஜனநாயக கட்சியின் நயீம் அக்தர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பேசல் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

இந்நிலையில் இவர்கள் 34 பேரும் நகரில் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள எம்எல்ஏ விடுதிக்கு நேற்று முன்தினம் மாற்றப் பட்டனர். காஷ்மீரில் தற்போது குளிர் அதிகரித்து வரும் நிலை யில், ஓட்டலில் வெப்ப சாதனங்கள் போதிய அளவு இல்லை என்பதால் இவர்களின் உடல் நலம் கருதி மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடந்த வெள்ளிக்கிழமை நகரில் மற்றொரு விருந்தினர் இல்லத்துக்கு மாற்றப்பட்டார். மின்சாரம், வெப்ப சாதனங்கள் உள்ளிட்ட கூடுதல் வசதிக்காக அவர் மாற்றப்பட்டதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

இதனிடையே சென்டார் ஓட்டலில் அரசியல் கைதிகள் 34 பேருக்கும் 100-க்கும் மேற்பட்ட நாட்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவுக் கட்டணமாக ஓட்டல் நிர்வாகம் சுமார் ரூ.3 கோடிக்கு ‘பில்’ அனுப்பியுள்ளது. ஆனால் ஆகஸ்ட் 5-ம் தேதி சென்டார் ஓட்டல் கிளைச் சிறையாக மாற்றப் பட்டதால் அரசுக் கட்டணம் தான் தரமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்டார் ஓட்டல் நிர்வாகம், நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 கட்டணம் விதித்துள்ளது. ஆனால் நபருக்கு நாளொன்றுக்கு ரூ.800 மட்டுமே தரமுடியும் என அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்