சில மாதங்களுக்கு முன்பு நட்சத்திர ஓட்டலில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை இந்தி நடிகர் ராகுல் போஸ் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் நட்சத்திர ஓட்டலில் 2 வாழைப் பழங்களுக்காக அவருக்கு ரூ.442 கட்டண பில் வழங்கப் பட்ட சம்பவம் இணையத்தில் வெகுவாக பேசப்பட்டது.
இதையடுத்து அவரது ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகர் ராகுல் போஸ் பகிர்ந்த ட்விட்டர் பதிவைத் தொடர்ந்து, அதிக கட்டணம் வசூலித்ததற்காக ரூ.25,000 அபராதம் அந்த ஓட்டலுக்கு விதிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திப்பட இசை யமைப்பாளர் சேகர் ரவ்ஜியானி அதேபோன்ற ஓர் அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவர் அகமதா பாதிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஹயாத் ரீஜென்சியில் தங்கியிருந் தார். அப்போது அவர் வெறும் 3 முட்டைகள் சாப்பிட்டதற்காக ரூ.1672 கட்டணமாக வசூலிக் கப்பட்டது.
இது தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று சேகர் ரவ்ஜியானி ட்வீட் செய்துள்ளார். அதற்கான பில்லையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago