சர்ச்சைக்குரிய அயோத்தி இடம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்துள்ளதன் எதிரொலியாக உத்தரபிரதேச மாநிலத்தில் சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
உ.பி.யில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் அமைக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை யாரும் பரப்பாதவண்ணம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உ.பி. மாநில போலீஸ் டிஜிபி ஓ.பி. சிங் நேற்று கூறும்போது, “எவ்வளவு நாள் தேவைப்படுமோ அவ்வளவு நாட்கள் வரை போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருப்பர். அதுமட்டுமல்லாமல் வாட்ஸ்-அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக இதுவரை 70 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 270-க்கும் அதிகமான நபர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதற்காக 8 போலீஸ் மண்டலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மாவட்ட அளவில், ஒவ்வொரு மாவட்டமும் 2 மண்டலங்கள், பகுதிகளாக பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணிக்க சிறப்புப் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களோ, வதந்தியோ அதில் இருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர 3 லட்சம் டிஜிட்டல் தன்னார்வத் தொண்டர்களும், சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாட்ஸ்-அப்பில் தவறான தகவல்கள் பரப்புவோர் குறித்து 8874327341 என்ற எண்ணில் தகவல் தரலாம்.
பாதுகாப்புப் பணிகளில் பிஏசி படையைச் சேர்ந்த 228 கம்பெனி போலீஸாரும், மத்திய ஆயுதப் படையை (சிஏபிஎப்) சேர்ந்த 40 கம்பெனி போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநில போலீஸார், ஊர்க்காவல் படையினரும் இந்த தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர தீவிரவாத தடுப்புப் படையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் படையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
- பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago