வருவது வரட்டும் என்று டெல்லி போலீஸ் உறுதியாக இருக்க வேண்டும்: கிரண் பேடி ஆதரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி, பிடிஐ

வழக்கறிஞர்கள் - டெல்லி காவல்துறையினருக்கு இடையே நடந்த மோதல் விவகாரத்தில் என்ன வந்தாலும் சரி காவல்துறையினர் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

சம்பவத்துக்கு எதிர்வினையாற்றிய கிரண் பேடி 1988-ல் தான் பதவியிலிருந்த போது நடந்த சம்பவத்தைப் பற்றி பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் பகிர்ந்தார்:

“ஜனவரி 1988-ல் வழக்கறிஞர் ஒருவரை திருட்டு வழக்கில் கைது செய்த போது இதே போன்ற பதற்ற சூழ்நிலை தோன்றியது, அந்த வழக்கறிஞரை கைகளில் விலங்கு மாட்டி அழைத்து வந்தது வழக்கறிஞர்களிடையே பெரிய ஆர்ப்பாட்டத்தை உருவாக்கியது.

வழக்கறிஞருக்கு விலங்கு மாட்டிய அதிகாரிகள், போலீஸாரை உடனே இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கடும் போராட்டம் நடத்தினர், ஆனால் நான் அசைந்து கொடுக்கவில்லை.

அதே போல் இந்தச் சம்பவத்திலும் டெல்லி காவல்துறை வருவது வரட்டும் என்று உறுதியாக இருக்க வேண்டும்.

1988-ல் திஸ்ஹசாரியில் வழக்கறிஞர் கைது விவகாரத்தின் போது நான் டிசிபி (நார்த்) ஆக இருந்தேன். என்னை கைது செய்ய வேண்டும், பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அப்போதைய காவல்துறை ஆணையர் வேத் மார்வா என் பக்கம் உறுதியாக நின்று வழக்கறிஞர்களின் மிரட்டலுக்கு அடிபணிய மறுத்தார்” என்று கூறினார் கிரண் பேடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்