ஷேர் ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து: 10 பேர் பலி; 5 பேர் காயம்

By சுமித் பட்டாசாரி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னத்தில் நேற்று காலை ஷேர் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய தில் 10 பயணிகள் பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ராஜம் பகுதியில் இருந்து நேற்று காலை ஆந்திர அரசு பஸ் ஒன்று விசாகப்பட்டினத்துக்கு சென்று கொண்டிருந்தது.

விசாகப்பட்டினம் அருகே மாரிகவலசா எனும் இடத்தில் வந்தபோது, கார் குறுக்கே வந்ததால், பஸ் வலப்புறம் திருப்பப்பட்டது.

இதில் நிலைதடுமாறிய பஸ், எதிரே வந்து கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது மோதியதுடன், சாலையின் ஓரத்தில் இருந்த பீடா கடை மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை உட னடியாக அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து 5 பேர் உயர் சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப் படுகிறது. இது குறித்து விசாகப் பட்டினம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்