திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கும் நன்கொடையில் வரும் வட்டியில் இந்த மாபெரும் அன்னபிரசாத திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் லட்ச கணக்கான பக்தர்கள் பசியாறுகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இலவசமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாத திட்டத்தின் கீழ் தேவஸ்தானம் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உணவு வழங்கி வருகிறது. உலகில் பிறந்த உயிரினங்கள் எதுவும் உணவு இல்லாமல் வாழ முடியாது. உணவு உண்டால் மட்டுமே இந்த உடல் அதன் கடைமைகளை சரிவர செய்ய முடியும். பசியால் செய்யும் எந்த வேலையும் திருப்திகரமாக செய்ய இயலாது. இதன் காரணத்தினால் திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான அளவு இலவசமாக உணவு அளிக்கும் திட்டமே ‘அன்ன பிரசாத’ திட்டமாகும்.
முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் ஆட்சி காலத்தில் கடந்த 1984-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் தினமும் 2000 பக்தர்களுக்கு இத்திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. தற்போது தினமும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் இத்திட்டம் மூலம் பசியாறுகின்றனர். பக்தர்கள் வழங்கும் நன்கொடைகளை தேவஸ்தானத்தினர் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதில் வரும் வட்டி மூலம் இத்திட்டம் செயல்படுகிறது. இதில் காய்கறிகள் சென்னை, வேலூர், சேலம் உட்பட ஆந்திரா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் இருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற உணவு பொருட்கள் டெண்டர்கள் மூலம் பெறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மட்டும் இத்திட்டத்திற்கு 5.10 லட்சம் கிலோ அரிசி தேவைப்படுகிறது.
திருமலையில் உள்ள மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வேங்கமாம்பாள் நித்ய அன்னபிரசாத வளாகம், பிஏசி-2 ஆகிய இரு அரங்குகளில் காலை 9.45 மணி முதல் மதியம் 3.30 மணி வரை யிலும், மாலை 5.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையிலும் இலவச மாக பக்தர்களுக்கு உணவு பரிமாறப் படுகிறது. இந்த அரங்குகள் மிகவும் சுத்தமாக பராமரிக்கபட்டு வருகிறது. ஒவ்வொரு அறையிலும் 1000 பக்தர்கள் உண்ணும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பணக்காரர்கள் முதல் பாமரர்கள் வரை ஏழுமலையானின் பிரசாதமாக கருதி இங்கு வந்து உணவு உட்கொண்டு வருகின்றனர்.
ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வீதம் உணவு பரிமாறப்படு கிறது. இதற்காக ஆண்டிற்கு தேவஸ் தானம் ரூ. 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதே போன்று திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் இதே திட்டத்தின் கீழ் தினமும் 5000 பக்தர் களுக்கும், நடை பயணமாக வரும் பக்தர்களுக்கு அலிபிரி நரசிம்ம சுவாமி கோயில் அருகேயும், திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் விடுதியிலும் இலவச அன்ன பிரசாதம் தினமும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஏழுமலையானை தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும் இதே திட்டத்தின் கீழ் உணவு பொட்டலங் களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ’அன்னம் பரபிரம்மம்’ எனும் சொல்லுக்கேற்ப தினந்தோறும் பக்தர்களின் பசியை போக்கும் இத்திட்டத்திற்கு நிதி குவிந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
35 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago