இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து: ராஜபக்சேவிடம் வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க் கிழமை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த தகவலை, வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, நிம்மதி, நியாயம் கிடைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கை கட்டமைப்புக்குள் தேசிய சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தினார். இதற்கு 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல் செய்வதுடன் அதைத்தாண்டியும் உரிய நடவடிக்கை எடுப்பது உதவும் எனவும் ராஜபக்சேவிடம் எடுத்துரைத்தார் மோடி.

இலங்கை- இந்தியா இரு தரப்பு உறவு, வர்த்தக-பொருளாதார கூட்டுறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, இலங்கை திரிகோணமலை மாவட்டம், சாம்பூரில் 500 மெகாவாட் அனல்மின் நிலையத்தை விரைவில் தொடங்குவது குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் மோடி விவாதித்தார். இந்த பிரச்சினையில் இரு தரப்பிலுமே சம்பந்தப்படுபவர்கள் தமிழர்கள்தான். அவர்கள் தங்களுக்குள் பேசி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கான தேவை பற்றி இரு தலைவர்களின் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் சுஜாதா சிங் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்