டெல்லியில் அடிப்படை சுகாதார வசதியை அதிகரிக்கும் வகையில் சிறிய அளவிலான 500 தெரு மருத்துவமனைகளை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு தொடங்க உள்ளது.
இதில் சோதனை அடிப்படையில் டெல்லி பிர்ஹாகரி பகுதியில் 3 மருத்துவமனைகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளன.
டெல்லியில் சுமார் 2 கி.மீ. சுற்றளவில் 1 மருத்துவமனை வீதம் 500 தெரு மருத்துவமனைகளை இந்த நிதியாண்டில் படிப்படியாக தொடங்க கேஜ்ரிவால் அரசு திட்டமிட்டுள்ளது.
சுமார் 450 சதுர அடி பரப்பள வில் அமையும் இந்த மருத்துவ மனைகளுக்கான நிதி, கடந்த மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் `தி இந்து’விடம் கூறும்போது, “சோதனை அடிப்படையிலான 3 மருத்துவமனைகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இதில் கிடைக்கும் அனுபவம் மற்ற மருத்துவமனைகளை சிறப்பாக அமைக்க உதவும். இந்த மருத்துவமனைகளில் பெயரளவுக்கு இல்லாமல், சிறந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை கள் அளிக்கப்படும். இத்துடன் ஒருங் கிணைக்கப்பட்ட பரிசோதனைக் கூடங்களும் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இவற்றில் அனைத்து வகை மருத்துவப் பரிசோ தனைகளும் செய்யப்படும்” என்றார்.
சிறந்த மருத்துவர்களுடன் அடிப்படை மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங் களும் தெரு மருத்துவமனைகளில் இடம்பெற உள்ளன.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் 2 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த எண்ணிக்கை தேவையை பொறுத்து அதிகரிக்கப்படவும் உள்ளது.
இவற்றில் பிரபல தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களை பகுதிநேர அளவில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுடன் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெற்று, நல்ல அனுபவம் கொண்ட மருத்துவர்களையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவர்களுக்கான ஊதியம், அவர்கள் சிகிச்சை அளிக் கும் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட உள்ளது. தினமும் காலையில் 3 மணி நேரம் மட்டும் இந்த மருத்துவமனைகள் செயல்படும். பிறகு நோயாளிகளின் வருகையை பொறுத்து மாலையிலும் திறப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் மேலும் கூறும்போது, “பெரிய மருத்துவமனைகளுக்கு செல்லும் மக்கள் அங்கு அதிக நேரம் காத்திருப்பதால் அவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் வீணாகி விடுகிறது. இதை தவிர்த்து அவர்கள் வாழும் பகுதியிலேயே அதே தரத்திலான சிகிச்சையை அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதனால் அரசுக்கு ஏற்படும் செலவை சமாளிக்க, இந்த மருத்துவமனைகளில் விளம்பரம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்” என்றார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்லியின் தென் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இந்த மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்த அதிநவீன மருத்துவப் பரிசோதனைக் கூடங்களும் நிறுவப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
35 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago