எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு முடிந்து ஒருமாதம் ஆகியும் 9 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் அவலம்

By செய்திப்பிரிவு

போபால்

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு முடிந்து, மாணவர்கள் சேர்க்கை முடிந்து ஒருமாதம் ஆகியும் இன்னும் 9 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

மருத்துவப் படிப்புக்காக நீட் பொது நுழைவுத் தேர்வு இருப்பதைப் போல், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் பயில தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

கடுமையான போட்டியுடன் நடத்தப்படும் இந்தத் தேர்வில் எய்ம்ஸ் கல்லூரியில் இடம் கிடைப்பது மெரிட் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு கடும் போட்டிகளுக்கு மத்தியில் இடம் கிடைத்தபோதிலும், இதில் இன்னும் 9 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுட் என்பவர் கடந்த மாதம் 12-ம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம்தேதி மாணவர்கள் சேர்க்கை எய்ம்ஸ் கல்லூரியில் முடிந்த பின் இன்னும் 9 இடங்கள் காலியாக உள்ளன. நாக்பூர், பத்திண்டா, ராய்பூர் கல்லூரியில் தலா ஒரு இடம், தியோகர், பாட்னா, ரேபரேலியில் தலா 2 இடங்கள் என மொத்தம் 9 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. புதுடெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், ராய்பூர், மங்களகிரி, ரிஷிகேஷ், பாட்னா, நாக்பூர், பத்திண்டா, தியோகர், சாங்சரி, அவந்திபுரா, விஜய்பூர், ரேபரேலி ஆகிய 15 கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மே 25, 26-ம் தேதிகளில் நடந்து முடிந்தது.

மொத்தம் 1,206 இடங்கள் கொண்ட இந்தக் கல்லூரியில் ஜூன் 12-ம் தேதி மாணவர்கள் கலந்தாய்வும் நடந்து ஆகஸ்ட் 26-ம் தேதி முடிந்தது. மொத்தமுள்ள 1205 இடங்களில் 584 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், 28 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 311 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், அதில் 14 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 172 இடங்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், 8 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 83 இடங்கள் பிற்படுத்தப்பட்ட பழங்குடி பிரிவினருக்கும், 5 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம்தேதி மாணவர்கள் சேர்க்கை எய்ம்ஸ் கல்லூரியில் முடிந்த பின் இன்னும் 9 இடங்கள் காலியாக உள்ளன. நாக்பூர், பத்திண்டா, ராய்பூர் கல்லூரியில் தலா ஒரு இடம், தியோகர், பாட்னா, ரேபரேலியில் தலா 2 இடங்கள் என மொத்தம் 9 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் கவுட் கூறுகையில், "நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றும், கல்லூரியில் சேராமல் இருப்பதால், 9 இடங்கள் காலியாகவே இருக்கின்றன. கவுன்சிலிங்கில் கல்லூரியைத் தேர்வு செய்த நிலையிலும் தேர்வு செய்த கல்லூரியில் இன்னும் மாணவர்கள் சேரவில்லை.

ஆதலால் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி நிரப்பப்படாமல் இருக்கும் 9 இடங்களை நிரப்பிக்கொள்ள மாற்று ஏற்பாடு செய்ய அனுமதிக்குமாறு கோர வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்கள் இடம் கிடைக்காமல் தவிக்கும்போது 9 இடங்கள் வீணாகக்கூடாது" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்