‘ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்தியாவும் ஒன்றுதான் என்று அனைவரும் பார்க்க விரும்பினோம், இம்ரான் அதனை எங்களுக்காகச் செய்து வருகிறார்’

புதுடெல்லி, பிடிஐ

ஐநா.வில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தாக்கி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதையடுத்து அந்த இயக்கத்தின் செயல் தலைவர்களில் ஒருவரான கிருஷ்ண கோபால் ஆர்.எஸ்.எஸ்-ம் இந்தியாவும் ஒன்றுதான் என்று இம்ரான் கான் சுட்டுகிறார், இதைத்தான் நாங்களும் கூறிவருகிறோம், உலகமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம் இம்ரான் கான் பேச்சு இதற்கு உதவியுள்ளது என்று சற்றே கிண்டல் கலந்த தொனியுடன் பேசினார்.

காஷ்மீருக்காகப் பேசப்போய் கடைசியில் இம்ரான் கான் ஆர்.எஸ்.எஸ். பெயரைப் பரப்புவராக முடிந்துள்ளார் என்றார் அவர்.

“ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில்தான் உள்ளது, இந்தியாவுக்காக உள்ளது. எங்களுக்கு உலகத்தில் வேறு எங்கும் கிளைகள் கிடையாது. பாகிஸ்தான் எங்கள் மீது ஏன் கோபப்பட வேண்டும். அதாவது சங்கத்தின் மீது கோபம் காட்டினால் அது இந்தியாவுக்கு எதிரான கோபமே என்று பொருள். ஆர்.எஸ்.எஸ்-ம் இந்தியாவும் இப்போது ஒன்றுதான்.

இந்தியாவும் ஆர்.எஸ்.எஸ்-ம் ஒன்றுதான் என உலகம் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம் இதனை இம்ரான் சாஹப் மிகப்பிரமாதமாக எங்களுக்காகச் செய்து வருகிறார். அவர் எங்கள் பெயரை பரப்புகிறார்.

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றனர், ஆர்.எஸ்.எஸ்.இயக்கமும் எதிர்க்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து விட்டனர்.

இதனால் தான் இம்ரான் கான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தாக்கிப் பேசுகிறார். நாங்கள் அதிகம் எதுவும் செய்யாமலேயே ஆர்.எஸ்.எஸ்.க்கு நிறைய புகழ் சேருகிறது, இம்ரான் கான் இதனை நிறுத்தி விடக்கூடாது” என்றார் கிருஷ்ண கோபால்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE