ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முக்திக்கு ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருந்ததாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடுமையாக சந்தேகித்தார் என்று 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.தூலத் தனது வெளிவரவிருக்கும் புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மெஹபூபா முக்தி ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பிடமிருந்து 2002 தேர்தல்களுக்காக உதவி கூட பெற்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது.
மேலும் 1999-ம் ஆண்டு ஐசி-814 விமானக் கடத்தலின் போது கடத்தல்காரர்களின் நிபந்தனைகளை ஏற்று மத்திய அரசு பயங்கரவாதிகளை விடுதலை செய்ய முடிவெடுத்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பதவி விலக விரும்பினார் என்றும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.
ஏ.எஸ்.தூலத், ஐ.பி. உளவு அமைப்பில் 30 ஆண்டுகள் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர், 'ரா' உளவு அமைப்பின் தலைவராக 1999-2000 ஆண்டுகளில் பதவி வகித்தார். இதனையடுத்து பிரதமர் வாஜ்பாய் அலுவலகத்தில் காஷ்மீருக்கான சிறப்பு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
இப்போது இவர், Kashmir: The Vajpayee Years என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அந்தக் காலக்கட்டத்தைப் பற்றிய ரகசிய உள் விவரங்களை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புத்தக அறிமுக விழாவின் போது தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தூலத் கூறும்போது, “மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முக்திக்கு தீவிரவாதிகளின் ஆதரவு இருந்தது. 2002 தேர்தல்களின் போது ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புகள் இவருக்கு ஆதரவு அளித்ததோடு உதவியும் புரிந்தது. இந்த விஷயம், அப்போதைய பிரதமர் அலுவலகத்தில் மிகவும் சகஜமாக பேசப்பட்டு வந்தது” என்றார்.
இந்தியா டுடே தொலைக்காட்சியில் கரண் தாப்பர் நடத்திய 'டு த பாயிண்ட்' நிகழ்ச்சியில் தூலத் கூறும்போது, வாஜ்பாய் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோருக்கு, “மெஹபூபா முப்தி மீது கடும் சந்தேகங்கள் எழுந்தது, இதனையடுத்து 2003-ல் ஸ்ரீநகரில் அவருடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள வாஜ்பாய் மறுத்தார்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கூட வாஜ்பாய் தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்த தூலத் 2002-ம் ஆண்டு பிடிபி-யுடன் கூட்டணி வைப்பது பற்றி காங்கிரஸுக்கு எச்சரிக்கையும் செய்தார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
இன்று அத்தகைய பிடிபி-யுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது என்பதே இதில் சிறந்த நகைமுரண்.
இதே இந்தியா டுடே நேர்காணலில் தூலத், 2002 குஜராத் கலவரங்கள் தொடர்பாக சில தகவல்களையும் தெரிவித்தார், அதாவது, குஜராத் கலவரங்கள் கையாளப்பட்ட விதம் சரியல்ல என்று வாஜ்பாய் அதிருப்தி வெளியிட்டு, “குஜராத்தில் நாம் தவறிழைத்து விட்டோம்” என்று கூறியதாக தெரிவித்தார் தூலத்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago