ஸ்ரீநகரில் 11ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவத்தில் பெல்லட் குண்டுகள்: எக்ஸ்-ரே ஆதாரங்களின் அடிப்படையில் தகவல்

By பியர்சாதா ஆஹிக்

ஸ்ரீநகர் எலாஹிபாக் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் அஸ்ரர் அஹமட் ஆகஸ்ட் 6ம் தேதி ஷெர் இ காஷ்மீர் மருத்துவ விஞ்ஞான கழகத்தில் ஆகஸ்ட் 6ம் தேதி சேர்க்கப்பட்டார். ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ம் பிரிவு ரத்து செய்யப்பட்டது.

மோதலில் கல்வீச்சிக் காயத்தினால் இந்த மாணவர் மரணமடைந்ததாக போலீஸார் கூறிவரும் நிலையில், பெலட் குண்டுகள் காயம் இவரது மரணத்தில் பங்கு வகித்திருப்பதற்கான ஆதாரங்கள் எழுந்துள்ளன.

மருத்துவமனை ஆவணங்கள் கூறுவது என்னவெனில் அஸ்ரர் அகமெட் ஆகஸ்ட் 6ம் தேதி இரவு 6.46 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது அதில் தலை, கண் ஆகியவற்றில் பெல்லட் குண்டுகள் பாய்ந்தது தெரியவந்துள்ளது.

அஸ்ரர் அஹமெட் அனுமதிக்கப்படும் போது நோயாளி நோய்ப்பதிவேட்டில் 'சர்ஜிக்கல் எமெர்ஜென்சி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மருத்துவர்கள் அனைத்து விதமான காயங்களுக்காகவும் அஸ்ரர் அகமடை பரிசோதனை செய்தனர். அதாவது கண்ணீர்புகைக் குண்டு, பெல்லட் குண்டுகள் உட்பட இந்தப் பரிசோதனையில அடங்கும்.

ஆனால் மரணம் சம்பவித்தது எதனால் என்பதற்கான மருத்துவ அறிக்கையின் முழு விவரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. ஆனால் எக்ஸ்ரேயின் படி தலை, கண் உட்பகுதியில் பெல்லட் குண்டுகள் காணப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் மருத்துவ அறிக்கையின் கூற்றுக்கும் அடிஷனல் டிஜிபி முனீர் கான் கூற்றுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. 11ம் வகுப்பு மாணவர் கல்லெறி சம்பவத்தில்தான் இறந்ததாகக் கூறுவதோடு, “ஆகஸ்ட் 5ம் தேதிக்குப் பிறகு பாதுகாப்புப் படை நடவடிக்கையினால் ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை என்கிறார்.

இந்நிலையில் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்