சென்னை ஐஐடிக்கு மத்திய அரசின் சிறப்பு தகுதி: மனிதவள மேம்பாட்டு துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி
சென்னை ஐஐடி உள்ளிட்ட 5 அரசு நிறுவனங்களுக்கும், வேலூர் இன்டிட்யூட் டெக்னாலஜி உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களுக்கு சிறப்பு தகுதி வழங்கி மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கூறியதாவது:
நாடுமுழுவதும் சிறந்த கல்வியை வழங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து பல்கலைக்கழக மானியக்குழு அறிக்கைய சமர்பித்தது. அதன்படி, சென்னை மற்றும் காரக்பூர் ஐஐடிகள், டெல்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், பனராஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகிய 5 மத்திய அரசின் நிறுவனங்களுக்கு 'இன்ஸ்டியூசன்ஸ் ஆப் எமினென்ஸ்' என்ற சிறப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது.
அதுபோலவே அமிர்தா வித்யாபீடம், வேலூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, ஒடிசாவில் உள்ள கலிங்கா இன்ஸ்டியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, டெல்லியில் உள்ள ஜாமியா ஹம்தார்டு பல்கலைகழகம், மொஹாலியில் உள்ள சத்ய பாரதி பவுண்டேஷன்ஸ் நிறுவனத்தின் பாரதிய இன்ஸ்டியூட் ஆகியவற்றுக்கும் 'இன்ஸ்டியூசன்ஸ் ஆப் எமினென்ஸ்' என்ற சிறப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE