நாடுமுழுவதும் 12,500 ஆயுஷ் மையங்கள்: பிரதமர் மோடி உறுதி

By செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் 12,500 ஆயுஷ் மையங்கள்: பிரதமர் மோடி உறுதி
புதுடெல்லி

இந்திய மருத்துவ சிகிச்சை அளிக்கும் 12,500 ஆயுஷ் மையங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லியில் யோகா விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
நாடுமுழுவதும் ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு என்ற வரிசையில் இந்திய மருத்துவ முறைகளை இணைத்து ஆயுஷ் என்ற ஒரே அமைப்பாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதில் அனைத்து இந்திய மருத்துவமுறைகளும் கொண்டு வரப்படும்.
நமது பாரம்பரிய மருத்துவமுறையுடன் தொழில்நுட்பத்தை இணைப்பது மிகவும் அவசியம். ஆயுஷ் மருத்துவத்தில் பணியாற்ற ஏராளமான பணியாளர்கள் தேவை. இதை நோக்கி அரசு நகர்ந்து வருகிறது. நாடுமுழுவதும் 12,500 ஆயுஷ் மையங்கள் உருவாக்கப்படும். இந்த ஆண்டிலேயே 4000 ஆயிரம் மையங்கள் உருவாக்கப்படும்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE