காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு விவகாரம்; இந்தியா-பாகிஸ்தான் தங்களுக்குள் தீர்வு காண்பார்கள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

காஷ்மீர் பிரச்சினை இருதரப்பு விவகாரம், ஆகவே இந்தியாவும் பாகிஸ்தானும் அதற்கு தங்களிடையே தீர்வு காண்பார்கள், தேவைப்பட்டால் அமெரிக்கா இருப்பதாக அதிபர் ட்ரம்ப் மோடியுடன் சந்திப்புக்குப் பிறகு தெரிவித்தார்.

பிரான்சில் ஜி7 மாநாட்டுக்கிடையில் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சந்தித்து உரையாடினர்.

காஷ்மீர் விவகாரத்தில் தாங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக தன்னிடம் மோடி கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துக் கொள்வோம் என்றும் ‘3ம் நாடு தலையீடு கோரி தொந்தரவுபடுத்த விரும்பவில்லை’ என்றும் மோடி கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்புடன் மோடி செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, 1947-க்கு முன் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருநாடாக இருந்தது என்று கூறிய மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இம்ரான் கானுடன் சமீபத்தில் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலைக் குறிப்பிட்ட ட்ரம்ப், வறுமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருநாடுகளிலும் உள்ளது. ஆகவே இருநாடுகளும் மக்கள் நலனுக்காக பாடுபடவேண்டும் என்று இம்ரான் கூறியதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள் என்பதே தன் நிலைப்பாடு என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

-பிடிஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்