அனைத்து சிறைகளிலும் சிசிடிவி கேமரா: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By ஐஏஎன்எஸ்

சிறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும், மாநிலங் களில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப உத்தர விட வேண்டும் என்று கோரி திலீப் கே.பாசு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

நாட்டில் உள்ள எல்லா சிறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்த வேண்டும். இதை ஓராண்டுக்குள் மத்திய, மாநில அரசுகள் செய்து முடிக்க வேண்டும். அதற்குள் முடியாவிட்டால் 2 ஆண்டுகளுக்குள் கேமராக்கள் பொருத்த வேண்டும்.

மேலும், காவல் நிலையங்களில் உள்ள லாக்-அப் சிறைகளில் அசம்பாவிதங்கள் நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் நிலையத்தில் மட்டும் கேமரா பொருத்துவது பற்றி மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு காவல் நிலையத்தில் குறைந்தபட்சம் 2 பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

மாநில மனித உரிமை ஆணை யத்தில் காலியாக உள்ள பணி யிடங்களை, மாநில அரசுகள் 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண் டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்