திருப்பதி வனப்பகுதியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: தமிழக தொழிலாளர்கள் 4 பேர் கைது

By என்.மகேஷ் குமார்

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச்சூடு நடத்தி தமிழக தொழிலாளர்கள் 4 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த மே மாதம் நடந்த என்கவுன்ட்டருக்குப் பிறகும் செம்மரக் கடத்தல் ஓய்ந்த பாடில்லை. இதனால் போலீஸா ருக்கும், கூலித் தொழிலாளர் களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேஷாசலம் வனப்பகுதியில் சாமல ரேஞ்ச் பகுதியில் நேற்று முன்தினம் இரவு செம்மரம் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில், ஆயுதப்படை போலீஸார் வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 60-க்கும் மேற் பட்டோர் மரங்களை வெட்டி கடத்திச் சென்று கொண்டிருந்தனர். இதை கண்ட போலீஸார் அவர் களை சரண் அடையுமாறு எச்சரித் தனர். ஆனால் யாரும் சரணடைய வில்லை. மேலும் அவர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தி யதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் 2 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்கள் தப்பிக்க முயன்றபோது 4 பேரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 13 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும், வேலூரை சேர்ந்த முருகன், பொல்லி, விழுப்புரத்தை சேர்ந்த பொன்னுசாமி, சேலத்தை சேர்ந்த ரஜினி என்று தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவமாக, சித்தூர் மாவட்டம், பலமநேர் பஸ் நிலை யத்தில் நேற்று முன்தினம் தொழி லாளர்கள் பலர் பஸ்ஸுக்கு காத்திருந்தனர்.

35 பேர் கைது

சந்தேகம் அடைந்த பலமநேர் போலீஸார், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் செம்மரக் கட்டைகள் இருந்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து 35 பேரை கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

சென்னையில் தேடுதல்

இதனிடையே செம்மரக் கடத்தல் தொடர்பாக சித்தூர் மாவட்டம், ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த புருஷோத்தம ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் தமிழக தொழிலாளர்கள் செம்மரம் வெட்டுவதற்கு மலைப்பகுதிக்கு செல்ல வேன், கார் போன்ற வாகனங்களை ஏற்பாடு செய்து தந்ததாக கூறப்படுகிறது.

இவர் அளித்த தகவலின் பேரில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும் சென்னையை சேர்ந்த ஜெமினி கணேசன் என்பவரை தேடி, தனிப்படை போலீஸார் சென்னை சென்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்