கடந்த பிப்ரவரி 2017-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 பிற எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததற்காக இவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு மேற்கொள்ளப்பட்ட வழக்கில் தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கான பிரத்யேக அதிகாரத்தை நீதிமன்றம் எதற்கு தன் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
“அரசமைப்புச் சட்டத்தின் 10ம் பிரிவு (கட்சித் தாவல் தடைச் சட்டம்) தகுதியிழப்புச் செய்யும் அதிகாரத்தை பிரத்யேகமாக அவைத்தலைவருக்கு வழங்கியிருக்கும் போது, நீதிமன்றம் ஏன் அந்த அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்? அவையினுள் நடைபெறும் ஒரு விவகாரத்தில் நீதிமன்றம் ஏன் அவைத்தலைவர் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்?” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி போப்தே, மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் கேள்வி எழுப்பினார்.
ஏப்ரல் 2018 சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த திமுக தலைவர் ஆர்.சக்ரபாணி சார்பாக கபில் சிபல் ஆஜரானார்.
அப்போது உயர் நீதிமன்றம் தன் 57 பக்கங்கள் கொண்ட உத்தரவில் ரிட் மனு ஒன்றிற்காக அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 10-ன் கீழ் சபாநாயகரின் அதிகாரத்தை ஆக்ரமிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களை கோர்ட் எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ளவே கடினமாக இருக்கிறது. அத்தகைய உத்தரவு நீதிமன்றம் தன் எல்லைகளை மீறுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் அவமதிப்பு என்று கூற முடியாவிட்டாலும் நீதித்துறை ஒழுக்கத்தை மீறும் செயலாகாதா? என்று கேட்டிருந்தது.
மேலும் அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்ற விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்காக நிலுவையில் இருக்கும் போது கோர்ட் எப்படி தலையீடு செய்ய முடியும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கபில் சிபல் வாதம் என்னவெனில், “அரசியல் சட்டம் 10ம் பிரிவின் கீழ் சபாநாயகர் தன் கடமையைப் புறக்கணிக்கும் போது நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
ஆனால் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறும்போது எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் சட்டக்கடமையாற்ற வேண்டும் என்று அறிவுறுத்துமாறுதான் சக்கரபாணியின் ரிட் மனுவில் முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் சட்டக்கேள்வியையே ஆராயலாம் என்று கையில் எடுத்த பிறகு ரிட்மனுவில் கோரப்பட்டுள்ள வேண்டுகோளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.
ஆனாலும் சக்கரபாணி தன் வேண்டுகோளைத் திருத்தி உயர் நீதிமன்றமே நேரடியாக தகுதிநீக்கம் செய்ய முடியுமா என்று கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு செய்யலாம், ஆனால் அப்படிப்பட்ட திருத்தப்பட்ட வேண்டுகோள் கோப்பாக்கம் பெறவில்லை அல்லது வழக்காடுதலுக்கு வரவில்லை. எனவே இந்த அப்பீல் செல்லுபடியாகாது என்றார் ரோஹத்கி.
ஆனால் கபில் சிபல் இதற்குப் பதில் அளித்த போது , இல்லை, திருத்தப்பட்ட வேண்டுகோள் வழக்குக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்றம் பரவலாக இதனைப் பரிசீலித்து பிறகு மனுவை நிராகரித்தது. அதனால்தான் இப்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.
இதற்கு நீதிபதி போப்தே, இருதரப்பினரும் உயர்நீதிமன்றத்தை அணுகி இருதரப்பினரும் தெளிவு பெறுக என்றார். ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கபில் சிபல், ஏற்கெனவே திருத்தப்பட்ட வேண்டுகோளுக்கான பதில் ஏப்ரல் உத்தரவில் கிடைத்த பிறகு மீண்டும் தெளிவு கோர முடியாது ஆகவே உச்ச நீதிமன்றமே தற்போது இந்த அப்பீல் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.
கடைசியாக கோர்ட் வழக்கை தள்ளிவைத்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago