மும்பை பெண் மேயரும் சிவசேனா தலைவருமான ஸ்நேகல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மும்பையின் மாலை நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “மோடியின் சுயசார்பு, செயல்படும் விதம் ஆகியவற்றுக்காக அவரை நான் பாராட்டுகிறேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், அவரது ஆட்சி ஹிட்லரின் ஆட்சி போல் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதிகாரங்கள் ஒரு நபரிடம் குவிந்திருக்கும்போது, கட்டாயம் இவ்வாறு நடக்கும்” என்றார்.
மும்பையின் 7-வது பெண் மேயரும் முதல் தலித் பெண் மேயரு மான ஸ்நேகல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பை மாநகராட்சி பதவிக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்நேகல், இதற்கு முன் எல்ஐசி அதிகாரியாக பணியாற்றிவர்.
சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய காரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரி வரும் ஸ்நேகல், தனது பதவியும் முதல்வரின் பதவியை போன்றதுதான் என்கிறார். “சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய காரை மகாராஷ்டிர முதல்வர் பயன்படுத்தும்போது, மும்பையை பொருத்தவரை அதே பதவி அந்தஸ்து கொண்ட மேயர் ஏன் இதை பயன்படுத்தக் கூடாது? என்கிறார் ஸ்நேகல்.
மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான ஆளும் கூட் டணியில் சிவசேனா இடம்பெற் றுள்ள போதிலும் பாஜகவுக்கு எதிரான கருத்துகளை அவ்வவ் போது கூறி வருகிறது.
இந்நிலையில் மோடி பற்றி ஸ்நேகல் கூறிய கருத்து சிவசேனா வின் சமீபத்திய தாக்குதலாக கருதப் படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago