மும்பையில் ஒரே நாளில் 21 செ.மீ. மழை: அடுக்குமாடி வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; தண்ணீரில் மூழ்கிய கார்கள்

மும்பை

மும்பையில் ஒரே நாளி் 21 செ.மீ மழை கொட்டித் தீர்த்தால் வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. இங்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரவுமுழுவதும் அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 

மும்பை சாந்தகுரூஸ் பகுதியில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 24 மணிநேரத்தில் 21.9 செ.மீ. மழை பெய்துள்ளது. கொலாபாவில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நகரின் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 


புறநகர் பகுதியான தானே உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் மழையால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மும்பையில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கிக் கொண்டது. 700க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE