சன் டிவி சொத்துகளை பறிமுதல் செய்ய 23-ம் தேதி வரை இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By எம்.சண்முகம்

சன் டிவி சொத்துகளை பறிமுதல் செய்வது குறித்து இறுதி முடிவை எடுக்க வரும் 23-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கின் ஒரு பகுதியாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் சன் டிவி நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை முடக்கி, அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சன் டிவி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம் இதில் தலையிட மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தது. சன் டிவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் அடங்கிய அமர்வு, 2ஜி வழக்கு தொடர்புடைய விவகாரம் என்ப தால், தலைமை நீதிபதி அடங்கிய சிறப்பு அமர்வு தான் இதில் முடி வெடுக்க முடியும் என்று தெரிவித்து வழக்கை அந்த அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதற்கு ஏற்ப, சன் டிவி சொத்துகளை முடக்கும் இறுதி முடிவை எடுக்க திங்கள்கிழமை(நேற்று) வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த அமர் வில் இடம்பெற்றுள்ள மற்றொரு நீதிபதி வராததால், வழக்கின் விசார ணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் அமலாக்கப்பிரிவு அதி காரிகள் சொத்துகளை பறிமுதல் செய்துவிடுவார்கள் என்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சன் டிவி தரப்பில் வாதிடப்பட் டது. மத்திய அரசு சார்பில் வழக்கறி ஞர் ஆனந்த் குரோவர் ஆஜரானார்.

சன் டிவி-யின் வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள், வரும் 23-ம் தேதி வரை அமலாக்கப் பிரிவு அதி காரிகள் சொத்துகளை பறிமுதல் செய்வது குறித்து எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால தடை விதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்