‘‘திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்க்கு, அந்தக் குழந்தையின் பாதுகாவலர் என்ற அங்கீகாரத்தை வழங்கலாம். இதற்கு தந்தையின் ஒப்புதல் தேவையில்லை’’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு பணியில் கெஸட்டட் அந்தஸ்து உள்ள பெண் அதிகாரி ஒருவர், தனது குழந்தைக்கு சட்டப் பூர்வ பாதுகாவலர் (கார்டியன்) என்ற அங்கீகாரத்தை தனக்கு வழங்கும்படி கோரியிருந்தார். அதற்கான விண்ணப்பத்தில் முறைப்படி தந்தையின் பெயரை தெரிவிக்க வேண்டும். மேலும், தாய்க்கு பாதுகாவலர் அங்கீகாரம் அளிப்பது குறித்து தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பி அவருடைய ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டது.
இதை எதிர்த்து அந்த பெண் அதிகாரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவருடைய மனுக்கள் டெல்லி கீழ்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அந்த அதிகாரி மேல்முறையீடு செய்தார். தனது மனுவில், ‘‘பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தந்தையின் பெயரை குறிப்பிடுவது கட்டாயமில்லை எனும் போது, அசாதாரண சூழ்நிலையில் பாதுகாவலர் அந்தஸ்து கோரும் விண்ணப்பத்திலும் அந்த நடைமுறையை பின்பற்றலாம். மேலும், குழந்தையின் தந்தை பெயரை வெளியிடுவதால் இரு குடும்பத்தினருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படும். அத்துடன் குழந்தையின் தந்தை என்னுடன் 2 மாதங்கள் மட்டுமே தங்கியிருந்தார். அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதும் தெரியாது. மேலும், குழந்தை இருக்கிறது என்பதே அவருக்கு தெரியாது. எனவே, எனது குழந்தைக்கு சட்டப்பூர்வமாக நான்தான் முழு பாதுகாவலர். எனக்கு அந்த அங்கீகாரத்தை வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று பெண் அதிகாரி கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
திருமணமாகாமல் குழந்தை பெற்று கொண்ட பெண்ணுக்கு, அந்த குழந்தையின் பாதுகாவலர் என்ற அங்கீகாரம் வழங்கலாம். இதற்கு தந்தையின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை.
கீழ் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் குழந்தையின் நலனை கருத்தில் கொள்ளாமல் மனுக்களை நிராகரித்துள்ளன.
விசாரணை நீதிமன்றங்களில் உத்தரவுகளை ரத்து செய்கிறோம். இந்த வழக்கை கீழ் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறோம். இந்த விஷயத்தில் குழந்தையின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago