ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் கோதாவரி புஷ்கரம் எனப்படும் புனித நீராடல் விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக இரு மாநில அரசுகளும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளன.
‘கோதாவரி புஷ்கரம்’ விழாவின்போது கோதாவரி ஆற்றில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது தெலுங்கு மக்களின் நம்பிக்கை. இறுதியாக கடந்த 2003 ம் ஆண்டு ‘புஷ்கரம் விழா’ நடைபெற்றது. அதன்பிறகு இப்போது கோதாவரி புஷ்கரம் விழா ராஜமுந்திரியில் இன்று தொடங்குகிறது.
வரும் 25-ம் தேதி வரை 12 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் நாடு முழுவதிலு மிருந்து சுமார் 4 கோடி முதல் 5 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி,கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளம் கரைபுரள்கிறது.
ராஜமுந்திரி கோதாவரி புஷ்கரம் பகுதியில் இன்று மகா ஹாரத்தியுடன் விழா கோலாகலமாக தொடங்குகிறது.இதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானின் மாதிரி கோயில் நேற்று திறக்கப்பட்டது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பஸ் மற்றும் 503 சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago