நாடு முழுவதும் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய, செல்வாக்கு மிகுந்த 100 பெண்களை அடையாளம் காணும் பணியை பேஸ்புக் சமூக வலைதளத்துடன் இணைந்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்க உள்ளது.
இதற்காக அமைச்சகத்தின் பேஸ்புக் பக்கத்தில் சிறந்த பெண் களின் விவரம் வெளியிடப்படும். இதில் அதிக பரிந்துரைகளை பெறும் பெண்களின் பட்டியல், நடு வர் குழுவின் முன்வைக்கப்பட்டு, இவர்களில் 100 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இத்திட்டம் இன்று (ஜூலை 15) தொடங்க உள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இத்திட்டம் மக்களை சென்றடைய ஆதரவு கேட்டு நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, மாதுரி தீட்சித், கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோருக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
“பிறர் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய, நீங்கள் அறிந்த ஒருவரை நியமனம் செய்யலாம். இதுதவிர மக்களும் தங்கள் நியமனங்களை அனுப்புவதற்கு, அவர்களை உங்களின் தனிப் பட்ட பேஸ்புக், ட்விட்டர் பக்கங் கள் மூலம் நீங்கள் ஊக்கப்படுத்த லாம்” என்று மேனகா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டம் குறித்து மேனகா காந்தி கூறும்போது, “நமது நலனுக்காக, சமூக மாற்றத்துக்காக பாடுபடும் பெண்கள் நம்மைச் சுற்றிலும் உள்ளனர். அவர்களுக்கு போதுமான அளவில் நாம் நன்றி தெரிவிப்பதில்லை. அவர்களை கவுரவிக்க தற்போது வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது” என்றார்.
பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி தொடங்கி வைக்கும்போது, இந்த 100 பெண்களும் குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட உள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் நியமனங்களை இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago