ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில், வீட்டின் மாடியில் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டி ருந்த 5 பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.
விஜயவாடா நகரின் பவானி புரம் அருகே ஊர்மிளா நகர் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் கண்டா சுப்பா ரெட்டி (50) தனது வீட்டின் மாடியில் இரும்புத் தகடு களால் கூரை அமைக்கும் பணி யில் நேற்று காலை ஈடுபட்டிருந்தார். இவரது மகன் ஸ்ரீநிவாஸ் (20), மகள் லட்சுமி திருப்பதியம்மாள் (24) மற்றும் அருகில் வசிக்கும் திருப்பதி ரெட்டி (30), நாகார்ஜுனா (20) ஆகியோரும் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இரும்பு குழாயை பொருத்தும்போது, வீட்டின் மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில் குழாய் உரசியது. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
தகவலின் பேரில் பவானிபுரம் போலீஸார் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயரழுத்த மின் கம்பி யில் பிளாஸ்டிக் பைப்புகள் பொருத் தாததே விபத்துக்கு காரணம் என்று கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களை போலீஸார் சமாதானப் படுத்தினர்.
இறந்தவர்களின் குடும்பத் துக்கு ரூ. 2.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago