நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் மானியத்தை ரத்து செய்துவிடலாம் என்று எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகங்க ளில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்குவதால் 2013-14-ல் அரசுக்கு சுமார் ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்து கேட்டதில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் பெரிதானது. வசதி படைத்த எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு வழங்குவது ஏன் என்று விமர்சனம் செய்யப்படுகின்றது.
இதற்கிடையே, பல்வேறு அரசு நிறுவனங்களில் உள்ள உணவகங்களில் இதேபோன்ற சலுகை வழங்கப்படும் நிலையில், நாடாளுமன்ற உணவகங்களை மட்டும் இலக்குவைத்து சிலர் பிரச்சினை எழுப்புவதாக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சிக்கிம் ஜனநாயக முன்ன ணியின் எம்.பி. பி.டி. ராய் கூறும் போது, “நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு மானிய விலையில் உணவு வழங்குவதால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. எனவே, இந்த உணவு மானியத்தை ரத்து செய்து விடலாம். மேலும் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள உணவகங்களிலும் மானிய விலையில் உணவு வழங்கப்படுவது தொடர்பாகவும் கொள்கைமுடிவு எடுத்து அந்த மானியத்தையும் ரத்து செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.
கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ராஜேஷ் கூறும்போது, “இந்த விவகாரத்தை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. மானிய விலை உணவால் நாடாளுமன்ற உறுப் பினர்கள் மட்டுமல்லாமல், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரும் பயன் பெறு கின்றனர். மானியத்தை ரத்து செய்வதால் பிரச்சினை தீர்ந்து விடாது. சிறிய பிரச்சினைகளுக் காக நாம் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
கடந்த 1952-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த உணவகங்களை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், 9 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் ஊடகத் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ரூ.38-க்கு உணவு வழங்கப்படுகிறது.
ராஜேஷ் எம்.பி. மேலும் கூறும் போது, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதி படைத்தவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் 50 சதவீத உறுப்பினர்கள் அவ்வாறு இருக்கலாம். என்னைப் போன்ற மற்றவர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல. நாடாளு மன்றத்துக்கு வெளியில் உள்ள ஏராளமான பணக்காரர்கள் அரசின் மானியத்தை அனுபவிக்கின்றனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago