பயங்கரவாதத்தை நிராகரித்துவிட்டது இந்திய இஸ்லாமிய பாரம்பரியம்: மோடி பேச்சு

இந்தியாவிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள இஸ்லாமிய பாரம்பரியம் கொண்ட மக்கள், பயங்கரவாதத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகளில் பிரதமர் மோடி 8 நாட்கள் சுற்றுப் பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். முதல்கட்டமாக அவர் உஸ்பெகிஸ்தான் சென்றார். உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்து, கஜகஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு தலைநகர் அஸ்தானா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கஜகஸ்தான் பிரதமர் கரீம் மோசிமோவ் நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்திய நாடும் மற்ற மத்திய ஆசிய நாடுகளும் அறிவு, கருணை, நேசம், பக்தி என பண்பால் பிண்ணிப் பிணைந்த மக்களை கொண்டுள்ளது.

எப்போதுமே இந்நாட்டு மக்கள் அனைவரும் பயங்கரவாத சக்திகளை ஒதிக்கி வைத்துள்ளனர். இந்தியாவும் மற்ற மத்திய ஆசிய நாடுகளும் ஒற்றுமையுடம் இருப்பதற்கு மக்களின் மனப்பான்மையே காரணம்.

அனைத்து மக்களும் அவர்களுக்குள் நேசம் கொண்டும் தங்களது மார்க்கத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டும் இருக்கின்றனர்" என்றார்.

பாதுகாப்பு, ரயில்வே ,யுரேனியம் விநியோகம், விளையாட்டு மற்றும் தண்டனை கைதிகள் பரிமாற்றம் செய்வது என ஐந்து துறைகளில், இந்தியா, கசகஸ்தான் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஐ.நா.பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கவும் கஜகஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானுடன் பாதுகாப்பு, ரயில்வே ,யுரேனியம் விநியோகம், விளையாட்டு மற்றும் தண்டனை கைதிகள் பரிமாற்றம் செய்வது என 5 துறைகளுக்கான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஐ.நா.பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கவும் கஜகஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.

கஜகஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று பிற்பகல் பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார். ரஷ்யாவின் உஃபா நகருக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு பிரிக்ஸ் மற்றும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடுகளில் அவர் பங்கேற்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE