வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலை யொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார். 160 நமோ பிரச்சார ரதங்களையும் அவர் இயக்கி வைக்கிறார்.
மக்களவை தேர்தலைபோல நரேந்திர மோடியை முன்னிறுத்தி பிஹார் தேர்தலை சந்திக்கிறது பாஜக. இந்நிலையில் பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து வடக்கே 80 கி.மீ. தொலைவில் உள்ள முசாபர்பூரில் 25-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் மோடி. இதில் ‘நமோ ரதம்’ என்ற தனது பெயரிலான 160 பிரச்சார ரதங்களையும் அவர் இயக்கி வைக்கிறார். மக்களவை தேர்தலைப் போல, பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மோடியை முன்னிறுத்தி பாஜக பிரச்சாரம் செய்யவிருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 1 கோடி வீடுகளுக்கு நேரில் சென்று 3 கோடி மக்களை சந்திக்கும் ‘ஹர் கர் தஸ் தக்’ என்ற பிரச்சாரத்தை முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் 100 நாட்களில் பிஹாரின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள எல்லா வீடுகளுக்கும் நமோ ரதங்கள் மூலம் நேரடியாக சென்று ஆதரவு திரட்ட பாஜக முடிவு செய்துள்ளது.
ஜி.பி.எஸ். கருவிகள் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட இந்த ரதங்கள் டெல்லியில் தயாராகி வருகின்றன. விரைவில் இவை பிஹாருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதன் மூலம் பிஹாரின் 243 தொகுதிகளில் உள்ள சுமார் 43,000 கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக மாநிலத் தலைவர் மங்கள் பாண்டே கூறும்போது, “எங்கள் கட்சித் தொண்டர்களே தேர்தல் பிரச்சாரத்தின் உண்மையான படைகள். இவர்கள் உதவியால் 185 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவதே எங்கள் குறிக்கோள். பிரதமர் மோடி தலைமையில் இந்த குறிக்கோளை நாங்கள் அடைவது உறுதி” என நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான், உபேந்திர குஷ்வாஹா ஆகியோரின் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் முன் னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் புதிய கட்சியும் சேரவுள்ளது. எதிரணியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து போட்டியிட உள்ளன. இந்த அணியில் இடதுசாரி கட்சிகளையும் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது.
வழக்கமாக 3 அல்லது 4 முனைப் போட்டி நடைபெறும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதன் முறையாக இருமுனைப் போட்டி நடைபெற உள்ளது. என்றாலும் இரு அணிகளிலும் இன்னும் தொகுதிப் பங்கீடு முடி வடையவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago