தலைநகருக்கு நிலம் கொடுத்தவர்களின் கதி என்ன? - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஜா கேள்வி

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகருக் காக நிலம் வழங்கிய விவசாயிகளின் கதி என்ன? புதிதாக அமைய உள்ள தலைநகரில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் வசிக்க இயலுமா? என நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வுமான ரோஜா சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியின் மாஸ்டர் பிளானை,சிங்கப்பூர் நிறுவனம் 3 கட்டங்களாக தயாரித்து ஆந்திர அரசிடம் வழங்கி உள்ளது. இது சர்வ தேச தரத்தில் கட்டிடங்கள், மெட்ரோ ரயில் வழித்தடம், படகுப் பாதைகள், வானளாவிய கட்டிடங்கள் என பிரம் மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அரசுடன் கூட்டு சேர்ந்து புதிய தலைநகர் அமைக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறு வனங்கள் தங்களது நிறுவனங்களை அமைக்க முன் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய தலைநகருக்காக குண்டூர் மாவட்டத்தில் 29 கிராம மக்கள் தங்களது நிலத்தை அரசுக்கு வழங்கி உள்ளனர். இவர்கள் வழங்கிய 33 ஆயிரம் ஏக்கர் நிலத்துடன், வனத் துறைக்கு சொந்தமான 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் மத்திய அரசு வழங்கி உள்ளது.

தலைநகர் நிர்மாணிக்கப்பட்ட பிறகு, நிலம் வழங்கிய விவசாயி களுக்கு இலவசமாக இடம் ஒதுக்கப் படும் என ஆந்திர அரசு அறிவித்தி ருந்தது. இந்நிலையில் இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா, ஹைதராபாத்தில் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மாநிலப் பிரிவினை சட்டத்தின்படி ஆந்திர மாநில தலைநகருக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். இதுவரை இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால் கஜானா காலி என கூறிக் கொள்ளும் ஆந்திர முதல்வர், உலகத் தரத்திலான கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சாலைகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைநகரை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சிங்கப்பூர் அரசு நிறுவனங்களுடன் இணைந்து மாஸ்டர் பிளானை தயாரித்துள்ளார்.

இதைப் பார்க்கும்போது, பாகுபலி திரைப்படத்தின் டிரைலர் போல உள்ளது. ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் வசிக்க இயலாத வகையில் இந்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை அமல்படுத்தி னால், தற்போது இப்பகுதியில் வசிக் கும் பொது மக்கள் எங்கு செல்வார்கள்? தலைநகருக்காக நிலம் வழங்கிய விவசாயிகளின் கதி என்ன? நிலத்தை கையகப்படுத்தி கட்டிடங்கள் கட்டிய பின்னர் 2035-ம் ஆண்டு அவர்களுக்கு சிறிய இடம் கொடுக்கும் வரை அவர்கள் எங்கு வசிப்பார்கள்? எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்? இந்தக் கேள்விகளுக்கு முதல்வர் பதில் கூற வேண்டும்.

தெலங்கானா மேலவை தேர்தலில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியினர் சிக்கி உள்ளனர். இந்த விவகாரத்தை திசை திருப்பவே சந்திர பாபு நாயுடு இப் போது புதிய தலைநகரின் மாஸ்டர் பிளானை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர் அரசு இந்த மாஸ்டர் பிளானை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தலைநகர் நிர்மாண விவகாரத்தில் சிங்கப்பூர் அரசுக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே ஒருலட்சம் கோடி வரை ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகுதான் தலைநகர் அமைக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு ரோஜா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்