லலித் மோடிக்கு உதவிய விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் லலித் மோடி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதனை சமாளிப்பது குறித்து பாஜக தலைவர் அமித் ஷா டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இதில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐ.பி.எல். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள லலித் மோடிக்கு உதவியதாக குற்றம் சாட்டப் பட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு களை சமாளிப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப் பட்டது. வியாபம் ஊழல் வழக்கில் கடுமையாக விமர்சிக்கப் படும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் அமித் ஷாவை சந்தித்துப் பேசுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago