நரேந்திர மோடி தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சரவையில் 7 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் குறைந்த வயதுடையவர் ஸ்மிருதி இரானி (38), அதிக வயதுடையவர் நஜ்மா ஹெப்துல்லா (74).
பெண் அமைச்சர்கள் விவரம்:
1. சுஷ்மா ஸ்வராஜ்:
கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்து தற்போது உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார். கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அரசியல் கட்சியின் பேச்சாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்.
2. உமா பாரதி:
இவர் ஏற்ெகனவே அமைச்சராக இருந்தவர். சில காலம் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
3. நஜ்மா ஹெப்துல்லா:
இவரது வயது 74. மோடி அமைச் சரவையில் அதிகபட்ச வயதுள்ள பெண் அமைச்சர். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், 2004-ல் பாஜக-வில் சேர்ந்தார். மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்துள்ளார். தற்போது மாநிலங்களவை பாஜக உறுப்பினராக உள்ளார். மவுலானா அபுல் கலாம் ஆசாத் குடும்ப பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.
4. மேனகா காந்தி :
நேரு குடும் பத்தைச் சேர்ந்தவர். ஏற்ெகனவே மத்திய அமைச்சராக இருந்தவர். விலங்குகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருபவர்.
5. ஹர்சிம்ரத் கவுர் பாதல்:
பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் மனைவி. கூட்டணிக் கட்சி என்ற முறையில் சிரோன்மணி அகாலி தளம் சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
6. ஸ்மிருதி இரானி:
மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள குறைந்த வயதுடைய அமைச்சர். இவரது வயது 38. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றார். டெல்லியைச் சேர்ந்தவர்.
தொடக்கத்தில் மெக் டொனால்ட் ஓட்டலில் சுத்தம் செய்யும் பணியில் இருந்தவர். மாடலிங், அழகிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டிவி சீரியல் மூலம் புகழ்பெற்று பிரபலமானார். கடந்த 2003-ல் பாஜக-வில் சேர்ந்தார்.
7. நிர்மலா சீதாராமன்:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக உள்ளார். எம்.பில். பட்டம் பெற்றவர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago