இனி டெல்லியில் இருப்பவர்கள் தங்களுக்கு அனுப்பப்படும் கூரியர்கள் பெற அடையாள அட்டை காண்பிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதை அம் மாநில காவல்துறை கூரியர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த அம் மாநில போலீஸார் பல புதிய முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒன்றாக அங்குள்ள அனைத்து கூரியர் நிறுவனங்களுக்கும் ஒரு புதிய உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்படி, தமக்கு அனுப்பப்படும் பொருட்களை பெறுபவர்களிடம் கூரியர் நிறுவனங்கள் அடையாள அட்டைகளை சரிபார்த்து நகலை பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதில் வாக்களர், ஆதார், ரேஷன், ஓட்டுநர், பான் மற்றும் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்ப்பிப்பது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டவிரோதமான பொருட்கள் கடத்தப்படுவது தடுக்க முடியும் எனவும், பாதுகாப்பு சூழலை பலப்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது. இதேபோல், கூரியரில் பொருட்களை அனுப்ப வருபவர்களிடமும் தங்கள் அடையாள அட்டை இருக்க வேண்டியது அவசியம் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இத்துடன் கூரியர் நிறுவனங்கள் அனைத்தும் சிசிடிவி கேமிராக்களை அமைத்து அவர்களிடம் பொருட்களை அனுப்பவும், பெறவும் வருபவர்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களில் யார் மீதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக அந்த நிறுவனங்கள் தம் அருகிலுள்ள காவல் நிலையங்களில் தகவல் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு சுற்றறிக்கை மூலம் டெல்லியின் அனைத்து கூரியர் நிறுவனங்களுக்கு தகவல் அளித்துள்ள டெல்லி காவல்துறை, இதை மீறுபவர்கள் மீது ஐபிசி 188 பிரிவின்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறியுள்ளது. இந்த பிரிவின்படி, தண்டிக்கப்படுபவர்களுக்கு ரூபாய் 200 அபராதத்துடன் ஒரு மாதம் வரை சாதாரண சிறைத்தண்டணை வழங்கப்படும்.
வரும் ஆகஸ்ட் 31 வரை அமுலில் இருக்கும் இந்த உத்தரவிற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இங்குள்ள சில கூரியர் நிறுவனங்களில் சில சட்டவிரோதமான பொருட்களை தொடர்ந்து அனுப்பியும், பெற்றும் வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மீதான புகார் வந்ததையும் அடுத்து டெல்லி போலீஸார் இந்த உத்தரவை இட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago