புஷ்கரத்தில் 4 நாட்களில் 80 லட்சம் பக்தர்கள் நீராடல்

By என்.மகேஷ் குமார்

கோதாவரி மஹா புஷ்கர விழாவில் கடந்த 4 நாட்களில் 80 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாட்கள் என்பதால் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என கருதப்படுகிறது. இதனால் விஐபி பக்தர்கள் இந்த இரண்டு நாட்களில் கோதாவரி புஷ்கரத் துக்கு வரவேண்டாம் என ஆந்திர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கோதாவரி மஹா புஷ்கரம் தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களில் கோலாகலமாக கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளான்று, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள கோட்டகும்மம் பகுதியில் 29 பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஏற் பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் இருந்து கோதாவரி புஷ்கரத்தில் கடந்த 4 நாட்களில், ஆந்திர மாநிலத்தில் 60 லட்சம் பக்தர்களும், தெலங்கானா மாநிலத்தில் 20 லட்சம் பக்தர்களும் புனித நீராடி உள்ளனர். இந்நிலையில், இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த இரு நாட்களில் விஐபிக்கள் வர வேண்டாம் என ஆந்திர அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று காலை ராஜமுந்திரி அருகே உள்ள கொவ்வூரு மண்டலம், வாடபல்லி எனும் இடத்தில் கோதாவரி ஆற்றில் புனித நீராடினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம். இது போன்று பல சம்பவங்கள் நாட்டில் நடந்துள்ளன” என்றார்.

அன்னதான திட்டம்

ராஜமுந்திரியில், கோதாவரி புஷ்கரத்துக்கு வரும் பக்தர் களுக்காக அன்னதான திட்டத்தை நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். பக்தர்களுக்கு குடிநீர், அன்ன தானம் செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வர வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி ராஜமுந்திரி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் முன் வந்தனர். இதையடுத்து அன்னதான திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்