யாகூப் மேமன் வழக்கில் நடைமுறை மீறல்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

By எம்.சண்முகம்

யாகூப் மேமன் வழக்கில் நடை முறை மீறல் குறித்து பதிலளிக்கும் படி, மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவரது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30-ம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார். இதற்கான உத்தரவை மும்பை தடா நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார். இந்நிலையில், நாட்டின் 100 பிரபலங்கள் கையெழுத்திட்ட கருணை மனு ஒன்றை குடியரசுத் தலைவருக்கு யாகூப் மேமன் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிரா ஆளுநர் வித்யா சாகர் ராவுக்கும் கருணை மனு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையே, யாகூப் மேமன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், `எனக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட பரிகாரங்களை நான் முழுமை யாக பயன்படுத்தும் முன்பே, தூக்கு தண்டனையை அமல்படுத்த தடா நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்ட விதி மீறல். எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் தவே, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், “யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட் டுள்ள தூக்கு தண்டனை சட்ட விதிமீறல். மேலும், தண்டனையை நிறைவேற்றும் உத்தரவு ஜூலை 13-ம் தேதிதான் வழங்கப்பட்டது. வெறும் 17 நாட்கள் மட்டுமே அவ காசம் வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் முன்பே தண்டனையை நிறைவேற்றும் தேதி நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், “வழக்கின் உள்ளே செல்ல நாங்கள் இப்போது தயாராக இல்லை. அவை அனைத்தும் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டு விட்டது’’ என்று தெரிவித்தனர். வழக்கு விசா ரணையின்போது, நீதிபதி குரியன் ஜோசப், “யாகூப் மேமனின் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்ட போது, சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் அனைவருக் கும் மனுவின் நகல் வழங்கப்பட வேண்டும் என்பது சட்ட விதிமுறை. இந்த சட்ட விதிமுறையை மத்திய அரசு ஏன் பின்பற்றவில்லை. சீராய்வு மனுவை அனில் தவே, சலமேஸ்வர் மற்றும் நான் அடங்கிய அமர்வு விசாரித்தது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டபோது, என்னையும், நீதிபதி சலமேஸ்வரையும் விசா ரணை அமர்வில் சேர்க்கவில்லை.

தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், அனில் தவே அடங்கிய அமர்வு மறுசீராய்வு மனுவை விசாரித்து தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் விதிகள் மீறப்பட்டுள்ளது குறித்து, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்